search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல்ப் போட்டியில் இந்தியர்கள் அபார சாதனை
    X

    கோல்ப் போட்டியில் இந்தியர்கள் அபார சாதனை

    கோல்ப் போட்டியில் இந்தியர்கள் அதிதி அசோக், எஸ்.எஸ்.பி.சாவ்ராசியா அபார சாதனை படைத்துள்ளனர்.
    குர்கான் :

    பெண்களுக்கான இந்திய ஓபன் கோல்ப் போட்டி குர்கானில் நடந்தது. பல்வேறு நாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் மொத்தம் 213 (-3) புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை நேற்று தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் ‘லேடிஸ் ஐரோப்பிய டூர்’ அந்தஸ்து பெற்ற போட்டி ஒன்றில் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். பெங்களூருவைச் சேர்ந்த 18 வயதான அதிதி, இந்திய அணிக்காக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் ஆவார்.

    இதே போல் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த உலக மணிலா மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய வீரர் எஸ்.எஸ்.பி.சாவ்ராசியா பட்டத்தை சொந்தமாக்கினார். கடும் சவாலாக விளங்கிய அமெரிக்காவின் சாம் சியான், மலேசியாவின் நிகோலஸ் பங் ஆகியோரை கடைசி கட்டத்தில் பின்னுக்கு தள்ளி அசத்திய 38 வயதான சாவ்ராசியா கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு வெளியே அவரது முதல் ஆசிய டூர் பட்டமாக இது அமைந்தது.
    Next Story
    ×