என் மலர்

  செய்திகள்

  விராட் கோலி ‘ஹிட்’ விக்கெட்டும், மோசமான சாதனைகளும் ...
  X

  விராட் கோலி ‘ஹிட்’ விக்கெட்டும், மோசமான சாதனைகளும் ...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 ரன்கள் எடுத்த நிலையில் ‘ஹிட்’ விக்கெட் ஆனார். இதன்மூலம் இந்திய வீரர்களின் ஹிட் விக்கெட்டு சாதனைகள் வெளிப்பட்டுள்ளன.
  ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 ரன்கள் எடுத்த நிலையில் ‘ஹிட்’ விக்கெட் ஆனார். இதன்மூலம் இந்திய வீரர்களின் ஹிட் விக்கெட்டு சாதனைகள் வெளிப்பட்டுள்ளன.

  1. ‘ஹிட்’ விக்கெட் மூலம் அவுட்டாகிய 2-வது இந்திய கேப்டன் விராட் கோலி. இதற்கு முன் 1949-ம் ஆண்டு லாலா அமர்நாத் 13 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஹிட் அவுட் ஆகியுள்ளார்.

  2. இங்கிலாந்துக்கு எதிராக ஐந்தாவது பேட்ஸ்மேன் விராட் கோலி. இதற்கு முன் திலிப் சர்தேசாய், மதன் லால், வினூ மங்கட், பிரிஜேஷ் பட்டேல் ஆகியோர் ‘ஹிட்’ அவுட் ஆகியுள்ளனர்.

  3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கெதிராக ‘ஹிட்’ விக்கெட் ஆன முதல் இந்திய வீரர் விராட் கோலிதான். இதற்கு முன் 2011-ம் ஆண்டு கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது ‘ஹிட்’ அவுட் ஆகியுள்ளார்.

  ‘ஹிட்’ அவுட் ஆன இந்திய வீரர்களின் விவரங்கள்:-

  1. லாலா அமர்நாத், 2. மாதவ் ஆப்தே, 3. நரேன் தம்ஹானே, 4. சந்து பார்டே, 5. புதி குந்தேரன், 6. திலிப் சர்தேசாய், 7. விஜய் மஞ்ரேக்கர், 8. ஹனுமந்த் சிங், 9. எம்.எல். ஜெய்சிம்ஹா, 10. சையத் அபித் அலி, 11. மதன் லால், 12. வினூ மன்கத், 13. பிரிஜேஷ் பட்டேல், 14. திலிப் வெங்சர்க்கார், 15. மொகிந்தர் அமர்நாத் (மூன்று முறை), 16. கிரண் மொரே, 17. நயன் மோங்கியா, 18. சிவ் சுந்தர் தாஸ், 19. வி.வி.எஸ். லட்சுமண், 20. விராட் கோலி.
  Next Story
  ×