என் மலர்

  செய்திகள்

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து: சென்னை கேரளா இன்று மோதல்
  X

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து: சென்னை கேரளா இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி- கேரளா பிளாஸ்டர்ஸ்வுடன் மோதுகிறது.

  கொச்சி:

  8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 32-வது ‘லீக்’ ஆட்டம் கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

  இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகிறது.

  சென்னை அணி 2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்று முன்னேற்றம் காணும் ஆர்வத்துடன் இருக்கிறது.

  சென்னை அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை. 3 ஆட்டத்தில் டிரா செய்தது. கடைசியாக டெல்லியிடம் 1-4 என்ற கணக்கில் மோசமாக தோற்றது.

  இதனால் சென்னை அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

  இரு அணிகள் மோதிய முதல் ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆகி இருந்தது.

  கேரளா பிளாஸ்டர்ஸ் 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

  டெல்லி அணி 9 ஆட்டத்தில் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், மும்பை அணி 15 புள்ளியுடன் (10 ஆட்டம்), இரண்டாவது இடத்திலும் உள்ளது. முன்னாள் சாம்பியன் கொல்கத்தா 12 புள்ளியுடனும், புனே அணி 12 புள்ளியுடனும் 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளன. கவுகாத்தி 6-வது இடத்திலும், கோவா 8-வது இடத்திலும் உள்ளன.

  ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

  Next Story
  ×