என் மலர்

  செய்திகள்

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு
  X

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது.
  மும்பை:

  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ராஜ்காட்டில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதன்பின்னர் விசாகப்பட்டினம் (17-21), மொகாலி (26-30), மும்பை (டிச.8-12), சென்னை (டிச.16-20) ஆகிய இடங்களில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன.

  இந்த தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக தேசிய தேர்வுக்குழுவினர் நாளை மும்பையில் கூடி ஆலோசனை நடத்தி வீரர்களை தேர்வு செய்கின்றனர்.

  சிக்குன் குனியா காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உடற்தகுதி பெற்றுள்ள இஷாந்த் சர்மாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் மற்றும் தவான் இருவரும் விளையாட தகுதி பெற்றால் காம்பீருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

  தற்போது வங்காளதேசத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அங்கிருந்து நாளை இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல்  டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பயிற்சி ஆட்டம் எதுவும் வரையறுக்கப்படவில்லை. மும்பை கிரிக்கெட் கிளப்பில் பயிற்சியில் ஈடுபடுகின்றன. அதன்பின்னர் ராஜ்கோட்டுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
  Next Story
  ×