என் மலர்
செய்திகள்

ஹராரே டெஸ்ட்: பாலோஆனை தவிர்த்தது ஜிம்பாப்வே
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 373 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கிரெமெர் சதத்தால் பாலோஆனை தவிர்த்தது.
சென்னை:
இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்பே அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்தது.
மவோயோ 41 ரன்னுடனும், மசகட்சா 33 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 373 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கிரெமெர் 102 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 164 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்தது.
Next Story