என் மலர்

  செய்திகள்

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து: சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? மும்பையுடன் நாளை மோதல்
  X

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து: சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? மும்பையுடன் நாளை மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

  சென்னை:

  இந்தியன் சூப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

  இந்தப் போட்டியின் 28-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

  நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

  கோவா (2-1), கவுகாத்தி (1-0) அணிகளை வென்றது. கொல்கத்தா (2-2), புனே (1-1), கேரளா (0-0) அணிகளிடம் ‘டிரா’ செய்தது. டெல்லியிடம் 1-3 என்ற கணக்கில் தோற்றது.

  நாளைய போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னையின் எப்.சி. 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும்.

  மும்பை அணி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

  Next Story
  ×