என் மலர்

    செய்திகள்

    காதலி அனுஷ்கா சர்மாவுடன் தீபாவளி கொண்டாடிய கோலி
    X

    காதலி அனுஷ்கா சர்மாவுடன் தீபாவளி கொண்டாடிய கோலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கோவாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்.
    பனாஜி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அவர், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு சதம், இரண்டு அரை சதத்துடன் 358 ரன்கள் குவித்தார். தொடரை வெல்ல காரணமாக இருந்த விசாகப்பட்டினம் போட்டியில் 65 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார்.

    விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களில் சுற்றி வந்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கோவாவில் தீபாவளி கொண்டாடினார். விசாகப்பட்டினத்தில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டி முடிந்த பிறகு கோலி கோவா சென்றார். இதே போல் அனுஷ்காவும் அங்கு வந்தார். இருவரும் இணைந்து தீபாவளியை கொண்டாடினர்.

    அதோடு கோவாவில் 30-ந் தேதி இரவு டெல்லி - கோவா மோதிய இந்தியன் சூப்பர் ‘லீக்‘ கால்பந்து போட்டியை இருவரும் ஒன்றாக ரசித்தனர்.

    இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியில் விளையாடும் அணியின் ஒன்றான கோவா எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இங்கிலாந்து அணியை அவர் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்.

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×