என் மலர்

    செய்திகள்

    சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் களம் இறங்கும் சாய்னா நேவால்
    X

    சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் களம் இறங்கும் சாய்னா நேவால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சாய்னா நேவால் வருகிற 15-ந் தேதி தொடங்கும் சீன சூப்பர் சீரிஸ் போட்டிக்கு களம் திரும்ப பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறிய இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருகிற 15-ந் தேதி தொடங்கும் சீன சூப்பர் சீரிஸ் போட்டிக்கு களம் திரும்ப பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் சாய்னா அளித்த ஒரு பேட்டியில், ‘நமது நாட்டில் பயிற்சிக்கான வசதிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சீனாவை போல் நம்மிடம் போதிய அளவுக்கு பேட்மிண்டன் அகாடமியும், பயிற்சியாளரும் இல்லை. நாட்டின் பெரிய நகரங்களில் குறைந்தபட்சம் 20 முதல் 30 பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும்.

    ஆனால் இங்கு அதிகபட்சமாக ஒரு நகரத்தில் 2 முதல் 3 பயிற்சியாளர்களே உள்ளனர். சீனாவில் ஒவ்வொரு நகரிலும் அதிகப்படியான வீரர்களும், பயிற்சியாளர்களும் இருப்பதால் அவர்களால் அதிக உலக சாம்பியன்களை உருவாக்க முடிகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் பல நாட்கள் உழைப்பால் கிரிக்கெட் ஆட்டத்தை பெரிய அளவில் வளர்த்து இருக்கிறது.

    அதேபோல் மற்ற சங்கங்களும் செயல்பட வேண்டும். பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி மூலம் அதிக அளவிலான வீரர்கள் பேட்மிண்டன் ஆட்டத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. விளையாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு நல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×