என் மலர்

  செய்திகள்

  உலக அளவிலான போட்டிகளில் இந்திய ஆக்கி அணி பட்டம் வெல்ல வேண்டும்: பயிற்சியாளர் ஒல்ட்மான்ஸ் கருத்து
  X

  உலக அளவிலான போட்டிகளில் இந்திய ஆக்கி அணி பட்டம் வெல்ல வேண்டும்: பயிற்சியாளர் ஒல்ட்மான்ஸ் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘உலக அளவிலான பெரிய போட்டிகளில் இந்திய ஆக்கி அணி பட்டம் வெல்ல வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் தெரிவித்துள்ளார்.
  குயான்டன்:

  ‘உலக அளவிலான பெரிய போட்டிகளில் இந்திய ஆக்கி அணி பட்டம் வெல்ல வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் தெரிவித்துள்ளார்.

  மலேசியாவில் நடந்த 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றியது. ஏற்கனவே 2011-ம் ஆண்டில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இருந்தது.

  சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆக்கி அணியால் நாடே பெருமைப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் முன்னாள் ஆக்கி வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பட்டம் வெல்வது மட்டுமே இந்திய அணியின் இலக்காக இருந்தது. வெற்றி வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்த போட்டியில் களம் கண்ட நாங்கள் எதிரணிகளை குறி வைத்து இதுவரை பார்த்திராத வகையில் கடும் நெருக்கடி அளித்தோம். இறுதிப்போட்டியில் இரண்டு கோல்கள் எதிரணி திருப்ப அனுமதித்து போட்டியில் நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் கடைசி கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணியினர் மனதிடத்துடன் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.

  இந்திய ஆக்கி ரசிகர்களை பொறுத்தமட்டில் இது பெரிய வெற்றியாகும். ஆனால் உலக அளவிலான பெரிய போட்டிகளில் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்பொழுதும் சிறப்புக்குரியதாகும். இது ஒரு சிறப்புக்குரிய வெற்றியாகும்’ என்றார். 
  Next Story
  ×