என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் களம் இறங்கிவிட்டால், விக்கெட் வீழ்த்துவேன் எனபது முத்திரையாகிவிட்டது: மிஸ்ரா சொல்கிறார்
    X

    நான் களம் இறங்கிவிட்டால், விக்கெட் வீழ்த்துவேன் எனபது முத்திரையாகிவிட்டது: மிஸ்ரா சொல்கிறார்

    ஒருமுறை அமித் மிஸ்ரா வந்து விட்டால், அவர் விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என்பது முத்திரையாக மாறிவிட்டது என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. இதற்கு மிஸ்ராவின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், தன்னுடைய சுழற்பந்து மற்றும் ஹூக்ளியால் நியூசிலாந்து அணியை சிதைத்து விட்டார். 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியதால் நியூசிலாந்து அணி 79 ரன்னில் சுருண்டது.

    இந்த தொடரில் மிஸ்ரா 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என்ற இரு விருதுகளையும் பெற்றார்.

    தனது பந்து வீச்சு குறித்து மிஸ்ரா கூறுகையில் ‘‘அமித் மிஸ்ரா ஒருமுறை களம் இறங்கி வி்ட்டால், அவர் விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என்ற வகையிலான பேச்சு முத்திரையாக மாறிவிட்டது. என்னை எப்போதும் விக்கெட் வீழ்த்த முடியும் பந்து வீச்சாளராகவே நான் பார்ப்பதுண்டு. நான் போட்டியின் மீது கவனம் செலுத்தி, போட்டிக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பந்து வீச முயற்சி செய்வேன். நம்முடைய சாதனைப் பற்றி அதிக அளவில் நினைத்தோம் என்றால், என் மீதே நான் அதிக அளவிளான நெருக்கடியை புகுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவேன்.

    எனது கடின உழைப்பு அனைத்தையும் செலுத்தி விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருப்பதன் மூலம் சந்தோஷம் அடைகிறேன். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான் விளையாடும் 2-வது தொடர் இது என்று நினைக்கிறேன். நேற்று விளையாடியது தொடரின் கடைசி போட்டி. நாங்கள் சிறந்த முறையில் பந்து வீச அதிக அளவில் நெருக்கடி இருந்தது. அந்த உணர்வு மிகவும் சிறந்ததாக இருந்தது.

    நான் தொடக்கத்தில் பந்து வீசும்போது சில பவுண்டரிகள் சென்றது. இதனால் கவலை அடைந்தேன். அந்த நேரத்தில் கேப்டன் டோனி என்னிடம் வந்து, என்னுடைய வழக்கமான பந்து வீச்சை தொடரக்கூறினார். அதேபோல் நானும் பந்து வீச விக்கெட்டுக்கள் வீழ்ந்தது’’ என்றார்.
    Next Story
    ×