என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்: டோனி பாராட்டு
    X

    பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்: டோனி பாராட்டு

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர் என்று கேப்டன் டோனி பாராட்டி உள்ளார்.
    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். பவுலர்களின் மிகவும் சிறப்பான செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் நமது சுழற்பந்து வீரர்கள் நன்றாக வீசினார்கள். குறிப்பாக அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இதேபோல அக்‌ஷர் பட்டேலும் நேர்த்தியாக பந்து வீசினார்.

    விராட் கோலியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. காயத்துடன் ரோகித் சர்மா தனது திறமையை வெளிப்படுத்தினார். முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேதர் ஜாதவ், அக்‌ஷர் பட்டேல், மனிஷ் பாண்டே போன்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடர் மிகுந்த அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கும். தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆட்டத்திறனை பொறுத்துதான் வெற்றி- தோல்வி முடிவு ஆகும். எங்களது ஆட்டம் மிகவும் கோரமாக அமைந்து விட்டது” என்றார்.
    Next Story
    ×