என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி - மும்பை ஆட்டம் டிரா
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி - மும்பை ஆட்டம் டிரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் டெல்லி - மும்பைக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
  புதுடெல்லி:

  3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோசும், மும்பை சிட்டி எப்.சி.யும் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மல்லுகட்டிய போதிலும் தொடக்கத்தில் மும்பையின் கை ஓங்கியது. 33-வது மற்றும் 39-வது நிமிடங்களில் மும்பை வீரர் கிரிஸ்டியன் வாடோக்ஸ் (ஹங்கேரி) அடுத்தடுத்து கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். 51-வது நிமிடத்தில் டெல்லி வீரர் ரிச்சர்ட் காட்ஸி தங்கள் அணிக்கு முதல் கோலை போட்டார்.

  69-வது நிமிடத்தில் சோனி நோர்டே கோல் அடிக்க, மும்பை அணி 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆனால் முன்னிலையை தக்க வைத்துக்கொள்ள மும்பை வீரர்கள் தவறினர். 76-வது நிமிடத்தில் டெல்லி அணியின் மாற்றுஆட்டக்காரர் பதாரா பாட்ஜி கோல் திருப்பினார். இதைத் தொடர்ந்து 82-வது நிமிடத்தில் டெல்லிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதை அந்த அணியின் மார்செலோ பெரீரா சுலபமாக கோலாக மாற்றினார். முடிவில் பரபரப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த சீசனில் தொடர்ந்து டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.

  மும்பை அணி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி ஒரு வெற்றி, 3 டிரா என்று 6 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. 
  Next Story
  ×