என் மலர்

  செய்திகள்

  மாநில கைப்பந்து- பாரதியார் பள்ளி அணி சாம்பியன்
  X

  மாநில கைப்பந்து- பாரதியார் பள்ளி அணி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநில கைப்பந்து போட்டியில் பாரதியார் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

  சென்னை:

  காஞ்சீபுரம் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் கற்பக வினாயகா கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் தமிழ்நாடு மாநில பள்ளிகள் கைப்பந்த போட்டி சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் கடந்த 4 தினங்களாக நடந்தது.

  இதன் ஆண்கள் பிரிவில் செயின்ட் சேவியர்ஸ் பள்ளி (பாளையங்கோட்டை) சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி சூப்பர் ‘லீக்’கில் தான் மோதிய 5 அணிகளையும் வென்றது. வேலுடையார் (திருவாரூர்), வேலம்மாள் (முகப்பேர்), அமெரிக்கன் பள்ளி (மதுரை), குமதா (ஈரோடு) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 5-வது இடங்களை பிடித்தன.

  பெண்கள் பிரிவில் பாரதியார் பள்ளி அணி (ஆத்தூர்) 25-14, 25-12 என்ற கணக்கில் ஈரோடு அரசு பள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. லேடி சிவகாமி 3-வது இடத்தையும், இவான்ஸ் 4-வது இடத்தையும் பிடித்தன.

  வெற்றி பெற்ற அணிகளுக்கு சுங்க இலாகா கமி‌ஷனர் சந்தோஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். சுங்க இலாகா உதவி கமி‌ஷனர் பாலு, ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், காஞ்சீபுரம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் எஸ். முகமது ஜின்னா, செயல் தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

  Next Story
  ×