என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கோவா ஆட்டம் டிரா
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா-கோவா ஆட்டம் டிரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
  கொல்கத்தா :

  3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 15-வது லீக்கில் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், எப்.சி.கோவாவும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கொல்கத்தா அணியில் 6-வது நிமிடத்தில் சமீக் டோட்டி கோல் அடித்தார்.

  கோவா அணியில் 77-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோன்ஸலேஸ் கோலாக்கினார். 4-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி சந்தித்த 3-வது டிரா இதுவாகும். அதே சமயம் தனது முதல் 3 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்த கோவா அணி இந்த சீசனில் முதல்முறையாக தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கிறது.

  புனேயில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனே சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
  Next Story
  ×