என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சாக்ஷி மாலிக் - சத்யவார்ட் காடியன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது எடுத்த படம்.
சக மல்யுத்த வீரருடன் சாக்ஷி மாலிக்கு நிச்சயதார்த்தம்
By
மாலை மலர்17 Oct 2016 2:46 AM GMT (Updated: 17 Oct 2016 2:46 AM GMT)

சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனுடம் சாக்ஷி மாலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ரோட்டாக்:
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் தான்.
24 வயதான சாக்ஷி மாலிக் தனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சுக்குள் நுழைகிறார். அவரும், சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனும் காதலித்து வந்தனர். ஒன்றாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சத்யவார்ட், சாக்ஷியை விட 2 வயது இளையவர். இவர் 2010-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருக்கிறார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து சாக்ஷி-சத்யவார்ட் திருமண நிச்சயதார்த்தம் அரியானா மாநிலம் ரோட்டாக்கில் உள்ள சாக்ஷி மாலிக்கின் இல்லத்தில் நேற்று நடந்தது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மணமகனின் தந்தை தெரிவித்தார்.

Next Story
×