என் மலர்
செய்திகள்

சீன தைபே ஓபன் பேட்மிண்டன்: சவுரப் வர்மா சாம்பியன்
சீன தைபே ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
தைபேயில் சீன தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சவுரப் வர்மா மலேசியாவின் டேரன் லீவ்-ஐ எதிர்கொண்டார்.
இதில் முதல் இரண்டு செட்டுகளையும் சவுரப் வர்மா 12-10, 12-10 எனக் கைப்பற்றி 2-0 என முன்னிலையில் இருந்தார். 3-வது செட்டில் இருவரும் தலா 3 புள்ளிகள் பெற்று 3-3 என சமநிலையில் இருந்தனர். அப்போது மலேசிய வீரர் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் சவுரப் வர்மா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட சவுரப் வர்மாவிற்கு இந்த வெற்றி ஊக்கத்தை அளித்துள்ளது.

Next Story