என் மலர்

  செய்திகள்

  டெஸ்ட் தொடரைப்போல் நினைத்து விடாதீர்கள்: நியூசிலாந்து வீரர் எச்சரிக்கை
  X

  டெஸ்ட் தொடரைப்போல் நினைத்து விடாதீர்கள்: நியூசிலாந்து வீரர் எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை தொடங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை, டெஸ்ட் தொடரை போல் எண்ணி விடாதீர்கள் என்று நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் ரோஞ்சி எச்சரித்துள்ளார்.
  நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துவிட்டது. கான்பூர், கொல்கத்தா மற்றம் இந்தூரில் நடைபெற்ற மூன்று டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்று நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

  இதனால் நாளை தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் தொடரை எண்ணி விடவேண்டாம் என்று நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ரோஞ்சி எச்சரித்துள்ளார்.

  இதுகுறித்து நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ரோஞ்சி கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்ட பந்து விளையாட்டு, முற்றிலும் மாறுபட்ட கிரிக்கெட். தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடிள்ளோம். டெஸ்ட் கிரிக்கெட் முடிந்துவிட்டது. அதில் இனி நாம் எதுவும் செய்ய முடியாது. தற்போது நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி. நாங்கள் தற்போது ஆடிவரும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் தொடரும் என்றால், இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்லும்.

  எங்களுடைய ஒருநாள் கிரிக்கெட் தற்போது சிறந்த நிலையில் உள்ளது. நாங்கள் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. நாங்கள் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கிறோம்.

  டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பின்பு ஒருநாள் கிரிக்கெட்டிற்கு செல்கிறோம். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை உயர்ந்த நிலையோடு முடிப்போம். எங்களுடைய திறமை மற்றும் செயல்திறனோடு நேர்மறையான எண்ணத்தோடு ஒவ்வொரு போட்டிக்கும் நாங்கள் செல்ல வேண்டும்’’ என்றார்.
  Next Story
  ×