என் மலர்

  செய்திகள்

  வெற்றி மகிழ்ச்சியில் ஜோகோவிச்.
  X
  வெற்றி மகிழ்ச்சியில் ஜோகோவிச்.

  ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் ஜெர்மனி வீரர் மிஸ்சா ஸ்ரெவேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
  ஷாங்காய் :

  ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ஜெர்மனி வீரர் மிஸ்சா ஸ்ரெவேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் ராபர்டோ பாடிஸ்டா (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 13-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை சாய்த்து அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு கால் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார்.
  Next Story
  ×