என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரள அணிக்கு முதல் வெற்றி
  X

  ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரள அணிக்கு முதல் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை தோற்கடித்து வெற்றி பெற்றது
  கொச்சி:

  இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

  கொச்சி நேரு ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக்கில் கேரளா பிளாஸ்டர்சும், மும்பை சிட்டியும் மோதின. முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பு தொற்றிக்கொண்டாலும் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதுவும் போட முடியவில்லை.

  பிற்பாதியில் வேகத்தை தீவிரப்படுத்திய கேரளாவுக்கு பலன் கிட்டியது. 58-வது நிமிடத்தில் கெர்வன்ஸ் பெல்போர்ட் எதிரணியின் 3 பின்கள வீரர்களை ஏமாற்றி தட்டிக்கொடுத்த பந்தை கேரளாவின் மைக்கேல் சோப்ரா (இங்கிலாந்து) லாவகமாக வலது பக்கம் திருப்பி கோலாக்கினார். பதிலடி கொடுக்க முயற்சித்த மும்பை அணியால் கேரளாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் நேரத்தை கடத்துவதில் கவனம் செலுத்திய கேரளா அணி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை தோற்கடித்தது.

  4-வது லீக்கில் ஆடிய கேரளாவுக்கு முதலாவது வெற்றி (2 தோல்வி, ஒரு வெற்றி, ஒரு டிரா) இதுவாகும். அதே சமயம் 4-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு முதல் தோல்வியாக இது அமைந்தது. டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-கவுகாத்தி அணிகள் சந்திக்கின்றன.
  Next Story
  ×