search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம்: கேப்டன் மிஸ்பாவிடம் ஐ.சி.சி. வழங்கியது
    X

    பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம்: கேப்டன் மிஸ்பாவிடம் ஐ.சி.சி. வழங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்தை ஐ.சி.சி. வழங்கியது.
    லாகூர்:

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து அந்த அணிக்கு ஐ.சி.சி. சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதம் வழங்கப்பட்டது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன், பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பாவிடம் தண்டாயுதத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மிஸ்பா, “ஏழு ஆண்டுகளுக்கு முன் இதே மைதானத்தில் கடைசி உள்ளூர் டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். எனவே, ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் தண்டாயுதம் பெறுவதற்கு இந்த மைதானத்தை விட வேறு சிறந்த இடம் இருக்க முடியாது.

    பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பெறுவது என்பது கடினமானது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இல்லை. அணி மற்றும் வீரர்களின் சில அற்புதமான செயல்பாடுகளை பார்வையாளர்கள் நேரில் கண்டுகளிக்க முடியவில்லை. ஆனால், இந்த நிலை மாறி பாகிஸ்தானில் விரைவில் சர்வதேச போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

    ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கெல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவின் டோனி, இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஹாசிம் ஆம்லா ஆகியோருக்குப் பிறகு மிஸ்பா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×