என் மலர்
செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: லட்சுமணன் நம்பிக்கை
விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி முதலிடத்தை பிடிக்கும் என வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் புதுடெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி முதலிடத்தை பிடிக்கும் ஆற்றல்மிக்க அணியாகும். அவர்கள் நீண்ட காலம் சிறந்த டெஸ்ட் அணியாக விளங்குவார்கள். விராட்கோலி இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கு அழைத்து செல்வார்.
ஏனென்றால் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பல சூழ்நிலைகளில் விளையாடி உள்ளனர். என் அனுபவத்தில் சொல்கிறேன். நீங்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் விளையாடி விட்டால் நல்ல அடித்தளம் பெற்று விடுவீர்கள். அதுபோன்ற வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
இந்தியாவில் விளையாடும் போது இங்குள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். அதற்கு ஏற்றார்போல் திறமைகளை வெளிப்படுத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.
பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கடின உழைப்பாளி. அவர் பயிற்சியாளர் பதவியில் இன்னும் சிறந்த பணியை வெளிப்படுத்துவார். அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளார். இது தொடரும் என்று நம்புகிறேன்.
நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும். தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலும், 3-வது வீரராக புஜாராவும் களம் இறங்க வேண்டும் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இதில் திட்டமிடல், பரபரப்பு என எல்லாவற்றையும் நீங்கள் பார்க்கலாம். இது எனக்கு 1980-ம் ஆண்டு காலகட்டத்தை ஞாபகப்படுத்துகிறது.
ரவிச்சந்திர அஸ்வின் மதிப்புமிக்க வீரர். அவர் அணியின் ஆல்-ரவுண்டராகவும், பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகவும் திகழ்கிறார். அவர் ஆட்டத்தை மாற்ற கூடியவர் என்றார்.

Next Story