என் மலர்
செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: காயம் காரணமாக நியூசி. ஆல்-ரவுண்டர் நீசம் விலகல்
நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ஜிம்மி நீசமுக்கு விலாப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. அந்த அணியில் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீசம் இடம்பிடித்திருந்தார். இந்தியாவில் பயிற்சியில் மேற்கொண்டிருக்கும்போது கடந்த வியாழக்கிழமை காயம் ஏற்பட்டது. இதனால் மும்பைக்கு எதிராக 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் சரியாக பங்கெடுத்துக் கொள்ளவில்லை. 5 ஓவர்கள் மட்டுமே வீசிய நீசம், பேட்டிங் செய்யவில்லை.
‘‘கடந்த இரண்டு மூன்று நாட்களாக நீசத்தின் உடல்நிலை சரியாக இல்லை. அவர் வலைப்பயிற்சியின் போது காயத்தில் அவதிப்படடார். தற்போது அவரது விலாப்பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கு சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார். ஆனால், 2-வது போட்டியில் பங்கேற்பார்’’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார்.
ஏற்கனவே முதுகுவலி காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நீசம் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. தற்போதுதான் சுமார் 10 மாதத்திற்குப்பின் இந்தியாவிற்கு எதிராக இடம்பிடித்துள்ளார். இந்த நேரத்தில் மேலும் ஒரு காயம் அவரை துன்புறுத்தியுள்ளது நீசத்திற்கு கவலையை அளித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் நீசம் காயம் அடைந்தது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் 22-ந்தேதி தொடங்குகிறது.

Next Story