search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷத்தன்மை கொண்டவரை வெல்ல ஒரே வழி, அவருடன் விளையாடாமல் இருப்பதுதான்: பயசுக்கு சானியா பதிலடி
    X

    விஷத்தன்மை கொண்டவரை வெல்ல ஒரே வழி, அவருடன் விளையாடாமல் இருப்பதுதான்: பயசுக்கு சானியா பதிலடி

    விஷத்தன்மை வாய்ந்த நபரை வெல்வதற்கு ஒரே வழி, அவர்களுடன் விளையாடாமல் இருப்பதுதான் என்று லியாண்டர் பயஸ் கருத்துக்கு சானியா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களாக லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள்.

    ரியோ ஒலிம்பிற்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா விளையாட தேர்வு பெற்றார். இதனால் இந்தியாவின் மற்றொரு வீரருடன் போபண்ணா கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. போபண்ணா லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு லியாண்டர் பயசுடன் இணைந்துதான் விளையாட வேண்டும் என்று கூறியது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ரியோ ஒலிம்பிற்கு தகுதிப் பெற்றார். அவர் தன்னுடன் விளையாடும் நபரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. அவர் போபண்ணாவுடன் ரியோவில் கலந்து கொண்டார். இந்த இரண்டு ஜோடியும் ரியோவில் தோல்வியை சந்தித்தது.

    2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா லியாண்டர் பயசுடன் விளையாடினார். அப்போது சானியா மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர விரும்பினார். ஆனால், இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு சம்மதிக்கவில்லை.

    அதன்பின் பொதுவாக போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் லியாண்டர் பயசுடன் ஜோடி சேர விரும்பில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் டெல்லியில் மோதின. இதில் இந்தியா 0-5 என தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது ரியோவிற்கு இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி சரியாக அமையவில்லை என்று பயஸ் கூறியிருந்தார்.

    இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சானியா மிர்சா எதிர்ப்பு தெரிவித்துள்ளளார். இதுதொடர்பாக சானியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விஷத்தன்மை கொண்ட நபரை வெல்ல ஒரே வழி, அவர்களுடன் விளையாடாமல் இருப்பதுதான்’’ என்று பயசை மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், #karmaiswatching #zenmode என்ற இரு ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்.



    சானியாவின் இந்த கருத்தினை ஏராளமானோர் ரீடுவீட் செய்துள்ளனர். அவர்களில் போபண்ணாவும் ஒருவர், அவர் தனது டுவி்ட்டரில், ‘‘இது திரும்பவும் நடைபெற்றுள்ளது... சக வீரர்களை வசைபாடி மீடியாக்களில் செய்தி வருவதற்காக செய்யப்படும் வழக்கமான சூழ்ச்சிதான் இது’’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் #Patriotism என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்.
    Next Story
    ×