search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்நாட்டு கட்டமைப்பு குறைபாடே ஒருநாள் கிரிக்கெட்டில் பின்தங்க காரணம்: மிஸ்பா சொல்கிறார்
    X

    உள்நாட்டு கட்டமைப்பு குறைபாடே ஒருநாள் கிரிக்கெட்டில் பின்தங்க காரணம்: மிஸ்பா சொல்கிறார்

    ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மிகவும் பின்தங்கி இருப்பதற்கு உள்நாட்டு கட்டமைப்பில் உள்ள குறைபாடே முக்கிய காரணம் என்று மிஸ்பா கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ய, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 111 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

    அனுபவ வீர்களான மிஸ்பா, யூனிஸ்கான் ஆகியோரை கொண்ட டெஸ்ட் அணி பிரகாசமாக ஜொலிக்கும்போது, இளம் வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் 86 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-4 என படுமோசமாக தோல்வியடைந்தது. தற்போது 9-வது இடத்தில் இருப்பதால் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு முடியாத நிலையில் இருக்கிறது. தகுதிச் சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் டி20 கிரிக்கெட்டில் 7-வது இடத்தில் உள்ளது.

    50  ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடாததற்கு உள்நாட்டு கட்டமைப்பே காரணம் என்று டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘இந்த சீசனில் பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனால், அதற்கு இணையான 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது கிடையாது.

    உள்ளூர் தொடர்களில் நாம் அதிகபட்சமாக ஐந்து 50 ஓவர்கள் போட்டிகளில்தான் விளையாடுகிறோம். அப்படி என்றால் நம்மால் இந்த வகை கிரிக்கெட்டில் வளர முடியாது. ஆகையால்தான், உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தும் முறையில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஏரமாளமான போட்டிகளை நடத்த வேண்டும் என்று நான் நீண்டகாலமாக கூறி வருகிறேன். நாம் ஒரெயொரு ஒரநாள் கிரிக்கெட் தொடரில்தான் விளையாடுகிறோம். கிளப் லெவலில் கூட ஒருநாள் தொடர் நடைபெறுவதில்லை’’ என்றார்.
    Next Story
    ×