என் மலர்

    செய்திகள்

    காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: வி.வி.எஸ்.லட்சுமணன்
    X

    காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: வி.வி.எஸ்.லட்சுமணன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு - காஷ்மீர் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொடூர தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்டது சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் வி.வி.எஸ் லட்சுமணன், “தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
    Next Story
    ×