search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். தொடருக்காக இங்கிலாந்து முன்னாள் வீரரை பயிற்சியாளராக வாடகைக்கு அமர்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
    X

    பாக். தொடருக்காக இங்கிலாந்து முன்னாள் வீரரை பயிற்சியாளராக வாடகைக்கு அமர்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

    பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடருக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரரரை பயிற்சியாளராக வாடகைக்கு அமர்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் 23-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை பயிற்சியாளர் இல்லாமல்தான் சந்திக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி கவுண்டி அணியான மிடில்செக்ஸ் மற்றும் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் பேட்ஸ்மேன் டோபி ராட்போர்டை இந்த தொடருக்காக பயிற்சியாளராக வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

    டோபி ராட்போர்டு இந்த தொடருக்கு மட்டும் பியிற்சியாளராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கி்றது.
    Next Story
    ×