என் மலர்

  செய்திகள்

  டி.என்.பி.எல்.: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி
  X

  டி.என்.பி.எல்.: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

  முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி அபிநவ் முகுந்த் (91), தினேஷ் கார்த்திக் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

  பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஜெகதீசன், ரகுநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஒருபுறம் ரகுநாத் நிதானமாக விளையாட மறுமுனையில் ஜெகதீசன் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தின் 6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ரகுநாத் 7, விக்டர் 0, கங்கா ஸ்ரீதர் ராஜூ 0 ஆகியோரை வீழ்த்தினார். இதனால் திண்டுக்கல் அணியின் நம்பிக்கை பறிபோனது.

  ஜெகதீசன் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வெங்கடராமன் 26 பந்தில் 40 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்களால் 188 ரன்னை எட்ட முடியவில்லை. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே சேர்த்தது. அதனால் தூத்துக்குடி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

  நாளை நடக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ்) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி  தூத்துக்குடி அணியுடன் மோதும். 
  Next Story
  ×