என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் எந்த ஆடுகளத்திலும் விளையாடத் தயார்: நியூசிலாந்து தொடக்க வீரர் கொக்கரிப்பு
  X

  இந்தியாவில் எந்த ஆடுகளத்திலும் விளையாடத் தயார்: நியூசிலாந்து தொடக்க வீரர் கொக்கரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான தொடரில் எந்தவொரு ஆடுகளம் தந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நியூசிலாந்து அணி தொடக்க பேடஸ்மேன் லாதம் தெரிவித்துள்ளார்.
  கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து விளையாடியது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.

  அம்லா, டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், வான் சைல், டுமினி, எல்கர் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த, இந்தியா அனைத்து ஆடுகளங்களையும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அமைத்தது. குறிப்பாக பந்து முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அதிக அளவில் திரும்பியது. இதனால் அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா ஆகியோர் தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்களை புரட்டியெடுத்தனர்.

  இதனால் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது. பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் மழையின் காரணமாக டிரா ஆனது. இந்த தொடர் குறித்து உலகளவில் பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்தியா தனக்கு ஆதரவாக ஆடுகளத்தை அமைத்து எதிரணியை தோற்கடித்து விட்டது என்று குற்றம்சாட்டியது.

  இந்நிலையில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த மூன்று டெஸ்டுகளும் தென்ஆப்பிரிக்கா தொடர் போன்றே இருக்கும் என்று கருதப்படுகிறது.

  இந்நிலையில் இன்று டெல்லியில் மும்பை அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

  முதலில் பேட்டிங் செய்த அந்த அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் லாதம், கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், சான்ட்னெர் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இந்திய சூழ்நிலையில் நியூசிலாந்தின் நான்கிற்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

  இதனால் நியூசிலாந்து அணி மகிழ்ச்சி அடைந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் லாதம் 55 ரன்கள் சேர்த்தார். இவர் இந்தியாவில் எந்தவொரு ஆடுகளம் தந்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.

  இதுகுறித்து லாதம் மேலும் கூறுகையில், ‘‘எந்தவொரு ஆடுகளம் தந்தாலும் எங்கள் அணியின் எல்லோராலும் சிறப்பாக விளையாட முடியும். நியூசிலாந்து வீரர்கள் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்துவிட்டனர் என்று நினைக்கிறேன். இதில் இருந்து முதல் டெஸ்ட் சற்று மாற்றமாக இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்று இங்கு வெளிப்படுத்திய திறமையை, முதல் டெஸ்டில் பெறுவோம்.

  இந்திய சூழ்நிழலைக்கு ஏற்றவாறு நியூசிலாந்து வீரர்கள் மாறிக்கொண்டது முக்கியமானது. இருந்தாலும் டெல்லி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் திரும்பவில்லை. பெரும்பாலான வீரர்கள் நீண்ட நேரம் நின்று விளையாடியது, எங்களுடைய தயார் படுத்திய நிலைக்கு சிறந்ததாக அமைந்த விஷயம். புதுப்பந்து இரண்டு அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எங்களுக்குத் தெரியும். இரண்டு அணிகளும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால், விரைவில் விக்கெட்டுக்களை வீழ்த்த வாய்ப்பாக அமையும். நாளை காலையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
  Next Story
  ×