search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 324 ரன்கள் குவித்து டிக்ளேர்- இந்தியா 29/1
    X

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 324 ரன்கள் குவித்து டிக்ளேர்- இந்தியா 29/1

    மும்பை அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடருக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இன்று தொடங்கிய மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று புதுடெல்லியில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த மும்பை அணி கேப்டன் ஆதித்ய தாரே பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மார்டின் குப்தில், டாம் லாதம் களம் இறங்கினர்கள். மார்டின் குப்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் பல்விந்தர் சந்து பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் லாதம் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. லாதம் 55 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு மூலம் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 50 ரன்கள் எடுத்து சந்து பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த டெய்லர் 41 ரன்கள் எடுத்து கோஹில் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    பின்னர் வந்த நிக்கோல்ஸ் 29, வாட்லிங் 21 (ரிட்டையர்டு), சான்ட்னெர் 45, கிரேக் 33 (அவுட் இல்லை), சோதி 29 (அவுட் இல்லை) ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய் பிஸ்டா, கவுஸ்டப் பவார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஸ்டா ரன்ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து அர்மான் ஜாபர் களம் இறங்கினார். மும்பை அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிந்தது. பவார் 5 ரன்னுடனும், அர்மான் ஜாபர் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×