என் மலர்
செய்திகள்

4 நாள் டெஸ்டுக்கு கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு
4 நாள் டெஸ்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
புளோரிடா:
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தாக்கத்தால் டெஸ்ட் அழிந்து வருகிறது. டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் குறைந்து வருகிறார்கள்.
இதனால் பகல்-இரவு டெஸ்டை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. மேலும் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 4 நாள் டெஸ்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ.யின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-
டெஸ்ட் போட்டியை 4 நாட்கள் நடத்தும் திட்டம் எந்தவிதத்திலும் சரியாகாது. இந்த திட்டம் எந்த விதத்திலும் பயன் அளிக்காது. டெஸ்ட் போட்டியை விறுவிறுப்பாக்க வேறு திட்டங்களை யோசிக்க வேண்டும்.
நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையை (டி.ஆர்.எஸ்.) கிரிக்கெட் வாரியம் எதிர்த்து வருகிறது. ‘ஹவாக்-ஐ’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமல் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
மினி ஐ.பி.எல். போட்டியை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்த போட்டியை நடத்தும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. நேரம் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதிகமான நேரம் வேறுபாடால் மினி ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story