என் மலர்

  செய்திகள்

  ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை
  X

  ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தம்புல்லாவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
  தம்புல்லா :

  ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தனஞ்செயா டி சில்வா 76 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 40 ரன்களும் எடுத்தனர்.

  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 31 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  ஜார்ஜ் பெய்லி 90 ரன்கள் (85 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 18 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் ஓ டொனெல், மேக்ஸ்வெல் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்களின் அதிவேக அரைசதத்தை (இவர்களும் 18 பந்து) சமன் செய்தார். பிஞ்ச் 55 ரன்களில் (19 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

  இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி பல்லகெலேவில் நடக்கிறது.
  Next Story
  ×