என் மலர்
செய்திகள்

குத்துச்சண்டை வீழ்ச்சிக்கு காரணமான பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விஜேந்தர், மேரி கோம் வலியுறுத்தல்
இந்தியாவில் குத்துச்சண்டை வீழ்ச்சிக்கு காரணமான பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் வலியுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வந்தாலும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்ற பிறகு தான் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அதன் எதிரொலியாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் மேரி கோம் உள்ளிட்ட 8 பேர் குத்துச்சண்டையில் களமிறங்கினார்கள். இந்திய அணி நிச்சயம் 4 பதக்கங்கள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்பால் வீரர்கள் அனைவரும் ஆரம்ப சுற்றுகளோடு வெளியேறினர், மேரி கோம் மட்டும் வெண்கலப் பதக்கத்தோடு நாடு திரும்பினார்.
இதன் பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் கோஷ்டி பூசல்களால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெறவில்லை. இதனால் இந்திய குத்துச்சண்டை விளையாட்டில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. குத்துச்சண்டை சம்மேளனத்தின் துணையின்றி சர்வதேச குத்துச்சண்டை களத்தில் போராடிய வீரர்களும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து போனார்கள். அதன் விளைவு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சிவ தாபா, விகாஸ் கிரிஷன், மனோஜ் குமார் ஆகியோர் 3 பேர் மட்டுமே தகுதி பெற்றார்கள்.
ரியோ ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் யாரும் பதக்கம் வெல்லவில்லை. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் குச்சத்துசண்டையில் உள்ள நிர்வாக குழப்பம் குறித்தான கசப்பான அனுபவத்தால் மனோஜ் குமார், இந்திய குத்துச்சண்டை இப்போது மரண படுக்கையில் உள்ளது, பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்த விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் இந்தியாவில் குத்துச்சண்டை வீழ்ச்சிக்கு காரணமான பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மற்ற வீரர்களும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்கள். விஜேந்தர் சிங் பேசுகையில், “இந்திய குத்துச்சண்டையின் மீது பொறுப்பு இருக்க வேண்டும். முதலில் ஒரு கூட்டமைப்பு இருக்கவேண்டும், இரண்டாவது இந்திய குத்துச்சண்டையின் இப்போதைய நிலைக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறி உள்ளார். தற்போது லண்டனில் தொழில்முறை போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
”திட்டப்படி செல்ல வேண்டும் என்றால், பயிற்சியாளர்களை ஆராய செய்ய வேண்டும். பிரச்சனை என்ன? தேசிய முகாமில் பல ஆண்டுகளாக எந்த ஒரு மாற்றமும் கிடையாது. நமக்கு புதிய ஐடியாக்கள் தேவைப்படுகிறது. நாம் முன்னேறி செல்ல வேண்டும் என்றால், இரக்கமற்ற மற்றும் மாற்றமான சிஸ்டம் நமக்கு தேவையானது,” என்றும் விஜேந்தர் சிங் கூறி உள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை கூட தேர்வு ஆகவில்லை. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மேரி கோம் பேசுகையில்,
ஒரு கூட்டமைப்பை கொண்டிருப்பது மிகவும் தேவையானது. இது நடந்து விட்டால், நம்முடைய செயல்பாட்டை மேம்படுத்த நாம் திறமையான பயிற்சியாளர்களை பெற முடியும். இங்கு நல்ல வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள், அப்போது தான் ஐடியாக்கள் பரிமாறிக்கொள்ளப்படும். பயிற்சியாளர்களும் முகாமில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும், என்றார். இதே போன்று பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரையில் சென்ற அகில் பேசுகையில், “பொறுப்பு விவகாரத்தில் விஜேந்தர் சிங் கூற்றை நான் ஏற்கின்றேன், அதனுடன் பயிற்சியாளர்கள் மாற்றப்பட வேண்டும்.
அவர்கள் பல ஆண்டுகளாக சுற்று வருகிறார்கள், இப்போது புதுமையை கொண்டுவர வேண்டிய நேரம் என்று நான் பார்க்கின்றேன்,” என்று கூறி உள்ளார்.
Next Story