search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 உலகக்கோப்பை இந்தியா-வெ.இ. போட்டியைவிட சிந்துவின் இறுதிப்போட்டியை அதிகம் பேர் பார்த்து சாதனை
    X

    டி20 உலகக்கோப்பை இந்தியா-வெ.இ. போட்டியைவிட சிந்துவின் இறுதிப்போட்டியை அதிகம் பேர் பார்த்து சாதனை

    டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை டி.வி.யில் பார்த்ததை விட சிந்துவின் இறுதிப்போட்டியை அதிகம் பேர் பார்த்துள்ளனர்.
    பெங்களூரை மையமாகக் கொண்ட மீடியா ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை டி.வி.யில் நேரடியாக பார்த்ததை விட பி.சி. சிந்து ரியோ ஒலிம்பிக்கில் ஸ்பெயின் வீராங்கனை மரின் கரோலினாவை எதிர்கொண்ட இறுதிப் போட்டியை அதிகம் பேர் பார்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    பி.சி. சிந்து மோதிய இறுதிப் போட்டியை 66.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். முக்கியமான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை விட இது குறைவானது. என்றாலும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை 50.1 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். இதைவிட அதிகம் பேர் சிந்துவின் போட்டியை பார்த்துள்ளனர்.

    அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹாராவுடன் மோதிய ஆட்டத்தை 25.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது இறுதிப்போட்டியில் 57.6 சதவீதமாக உயர்ந்தது. மூன்று செட்டுகள் நடைபெற்ற போட்டியில், 3-வது செட்டிற்கு 16.4 மில்லியனில் இருந்து 38 மில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
    Next Story
    ×