என் மலர்

  செய்திகள்

  டெஸ்டில் நான் அவுட்டான விதம் என்னையே கோபம் அடையச் செய்தது: ஸ்மித் சொல்கிறார்
  X

  டெஸ்டில் நான் அவுட்டான விதம் என்னையே கோபம் அடையச் செய்தது: ஸ்மித் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை அணிக்கெதிராக நான் அவுட்டான விதம் என்னையே கோபம் அடையச் செய்துள்ளது என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
  இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 0-3 என படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் முக்கியமான கட்டத்தில் மோசமாக ஷாட் ஆடி அவுட் ஆனார். முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். 2-வது இன்னிங்சில் 55 ரன்கள் எடுத்து ஹெராத் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆனார்.

  2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹெராத் பந்தில் 5 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். 2-வது இன்னிங்சில் பெரேரா பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

  3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 119 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். 2-வது இன்னிங்சில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் க்ளீன் போல்டானார். ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்த ஆஸ்திரேலியா, ஸ்மித்தின் தேவையில்லாத அவுட்டால், 160 ரன்னுக்குள் சுருண்டது. 6-ல் ஐந்து முறை ஹெராத் பந்தில்தான் அவுட்டாகியுள்ளார். இதனால்தான் தனது ஆட்டத்திறன் குறித்து ஸ்மித் கோபம் அடைந்துள்ளார்.

  இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஓட்டலில் தங்கியிருக்கும்போது என்னுடைய அவுட்டை நான் ரீபிளே செய்து பார்த்தேன். ஏராளமான ஷாட்டுகளை பார்க்கும்போது நான் வருத்தப்படுகிறேன். இரண்டு முறை ஹெராத் பந்தில் ‘கட் ஷாட்’ ஆடி போல்டானது வருத்தம் அளிக்கிறது.

  போல்டான சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது. ஏனென்றால், இந்த தொடருக்காக நான் நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன்.

  அதேபோல் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதும் வருத்தம் அளிக்கிறது. நான் லெக் ஸ்டெம்ப் பகுதியில் நின்றுதான் பேட்டிங் செய்தேன். பொதுவாக நான் பேட்டைதான் முதலில் நீட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்ய முடியாமல் போனது. வலைப் பயிற்சியில் நன்றாக பயிற்சி எடுத்த பந்தில் அவுட்டானதும், என்னுடைய சில ஷாட்டுகள் எனக்கே கோபத்தை ஏற்படுத்தியது’’ என்றார்.
  Next Story
  ×