என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு: டெல்லி அரசு அறிவிப்பு
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு டெல்லி அரசு ரூ.2 கோடி பரிசும், தெலுங்கானா அரசு ரூ1 கோடி பரிசு தொகையும் அறிவித்துள்ளது
வெள்ளி பதக்கம் வென்றதும் பி.வி.சிந்துக்கு நாடு முழுவதும் வாழ்த்து பரிசுகள் குவிந்தன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவ், மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
சிந்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிந்துவுக்கு பரிசுகளும் குவிகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ரூ.1 கோடி வழங்குகிறது. இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து உள்ளார்.
டெல்லி மாநில அரசு இன்று பி.சி.சிந்துக்கு ரூ.2 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில அரசும் ரூ.50 லட்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய கால்பந்து சங்கம் பி.வி.சிந்துக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது. இதுவரை அவருக்கு 4½ கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது.
மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Next Story