search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளேன்: ஒலிம்பிக் மெடலிஸ்ட் பி.வி.சிந்து
    X

    மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளேன்: ஒலிம்பிக் மெடலிஸ்ட் பி.வி.சிந்து

    ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக பி.வி.சிந்து கூறியுள்ளார்.
    ரியோ:

    ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

    இதுகுறித்து பேட்டியளித்த பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என கூறியுள்ளார்.

    மேலும், ‘ஒலிம்பிக் இறுத்போட்டியில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி கடைசிவரை போராடினேன். இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. தங்கம் வென்ற மெரினுக்கு வாழ்த்துக்கள். இது அவருடைய நாளாக அமைந்துள்ளது.


    பதக்கம் வெல்லும் நோக்கத்துடனே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். தற்போது அது நிறைவேறியுள்ளது. இனி என்னுடைய பெயருக்கு பின்னால் ஒலிம்பிக் மெடலிஸ்ட் என்று சேர்த்து கோள்வேன்.’

    ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்சிக்கு வாழ்த்துக்கள். மற்ற போட்டிகளில் சில இந்திய வீரர்கள் சில புள்ளிகள் வித்தியாசத்திலேயே வெளியேறி உள்ளனர். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது.

    இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் மற்றும் என்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×