என் மலர்

  செய்திகள்

  ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து: இறுதிப் போட்டியில் போராடி தோல்வி
  X

  ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து: இறுதிப் போட்டியில் போராடி தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற வி்ட்டார்.
  இந்தியாவே எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டி இன்றிரவு 7.40 மணியளவில் தொடங்கியது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை எதிர்கொண்டார்.

  தொடக்கம் முதலே ஸ்பெயின் வீராங்கனை கரோலினா அபாரமாக விளையாடினார். அவருக்கு இணையாக சிந்துவும் விளையாடினார். ஒரு கட்டத்தில் சிந்து 4-8 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சுதாரித்து விளையாடி முன்னணி பெற்றார். பரபரப்பாக சென்ற முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார் சிந்து.

  2-வது செட்டில் கரோலினா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒருகட்டத்தில் பி.வி. சிந்து 4-12 என பின்தங்கினார். அதன்பின்னர் கடுமையாகப் போராடியும் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 12-21 என இழந்தார்.

  இதையடுத்து தங்கப்பதக்க்ததை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் ஸ்பெயின் வீராங்கனை அதிக்கம் செலுத்தினார். சிந்து பதற்றத்துடன் விளையாட, மரின் கரோலினா மிகவும் சகஜமான நிலையுடன் காணப்பட்டார். கரோலினா 6-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சிந்து ஒன்றிரண்டு பாயிண்டுகள் பெற 9-4 என கரோலின் முன்னேறினார்.

  அதன்பின் சிந்து எழுச்சி பெற்று புள்ளிகள் பெற, 10-10 சமநிலை அடைந்தார். பின்னர் கரோலின் தொடர்ந்து 4 பாயிண்டுகள் பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

  அதன்பின் இருவரும் தலா ஒரு பாயிண்டுகள் பெற 15-11 என ஸ்பெயின் வீராங்கனை முன்னிலையில் இருந்தார். அதன்பின் பி.வி. சிந்துவால் முன்னிலை பெற முடியவில்லை. ஆகவே, 3-வது செட்டை 15-21 என இழந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

  கரோலின் தங்கப் பதக்கம் வென்றதோடு ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கம் வென்ற ஐரோப்பிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
  Next Story
  ×