search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகமது அலி மற்றும் பீலே வரிசையில் நானும் இருக்கிறேன்: உசைன் போல்ட் சொல்கிறார்
    X

    மொகமது அலி மற்றும் பீலே வரிசையில் நானும் இருக்கிறேன்: உசைன் போல்ட் சொல்கிறார்

    உலகின் அதிவேக ஒட்டப்பந்தய வீரராக திகழும் உசைன் போல்ட், தன்னை மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் பீலே மற்றும் மொகமது அலிக்கு இணையாக வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    உலகின் அதிகவேக ஓட்டப்பந்தய வீரராக ஜமைக்காவின் உசைன் போல்ட் திகழ்ந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து இதுவரை அவரை 100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர் ஓட்டத்தில் வென்றது கிடையாது.

    இந்த மூன்று பிரிவிலும் (100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர்) 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ மற்றும் 200 மீ பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். 4X100 மீட்டர் தூரம் மட்டுமே மீதமுள்ளது. இதிலும் தங்கம் வென்றுவிட வாய்ப்பு உள்ளது.

    இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் மூன்று ஒலிம்பிக்கிலும் தங்க பதக்கம் வாங்கிய ஒரே வீரர் எனற சரித்திர சாதனை படைக்க இருக்கிறார்.

    இவர், விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கும் மொகமது அலி மற்றும் பீலே ஆகியோருடன் தன்னை சமநிலை வரிசையில் வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பீலே மற்றும் மொகமது அலி போன்ற மிகச்சிறந்த வீரர்களின் வரிசையில் இருக்கவேண்டும். பத்திரிகைகள் எப்படி எழுதுகின்றன என்பதை பார்க்க நாளை வரை (4X100 மீட்டர் போட்டி நடைபெறும் வரை) காத்திருக்கிறேன்.

    இந்த ஒரு நிலைக்காக நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்துள்ளேன். விளையாட்டில் மிகவும் சிறந்த வீரர்களில் ஒருவர் நான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கமும் இதுதான்’’ என்றார்.
    Next Story
    ×