என் மலர்
செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கோப்பையை அறிமுகப்படுத்தினார் டோனி
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கோப்பைக்கான அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த கோப்பையை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கோப்பைக்கான அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் 8 அணிகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விழா தொடங்கியதும் ஒவ்வொரு அணியின் லோகோவும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசினார். பின்னர் கோப்பையை டோனி அறிமுகம் செய்து பேசினார்.
இந்த தொடர் வரும் 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. சென்னை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

Next Story