என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்சி காலிறுதிக்கு முன்னேற்றம்: காயத்தால் வினேஷ் போகத் விலகல்
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்சி மாலிக் காலிறுதிக்கு முன்னேறினார். காயத்தால் வினேஷ் போகத் விலகினார்.
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் பங்கேற்றனர்.
58 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாக்சி மாலிக், மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில் இருவரும் 5-5 என சம நிலையில் இருந்தனர். ஆனால், சரிவிலிருந்து மீண்டு அடுத்தடுத்து 4 புள்ளிகளைப் பெற்றதால் சாக்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காலிறுதியில் ரஷ்யாவின் வேலரியாவை எதிர்கொள்கிறார்.
48 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ருமேனியாவின் எமிலியா அலினாவை 11-0 என வீழ்த்தினார். காலிறுதிப் போட்டியில் சீனாவின் சன் யனனுடன் மோதினார். இப்போட்டியின் துவக்கத்தில் சீன வீராங்கனை 2-1 என முன்னிலை பெற்றிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வினேஷ் ஆக்ரோஷமாக மோதினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
எழுந்து நடக்க முடியாமல் வலியால் துடித்த அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சீன விராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ்-க்கு காயம் பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story