என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்: பேட்மிண்டன் காலிறுதியில் போராடித் தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த்
    X

    ஒலிம்பிக்: பேட்மிண்டன் காலிறுதியில் போராடித் தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த்

    ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் போராடித் தோல்வியடைந்தார்.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரர் லின் டானை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் தடுமாறிய ஸ்ரீகாந்த் மிகவும் பின்தங்கினார். தொடர்ந்து 10 கேம்களை கைப்பற்றிய லின் டான், ஒரு கட்டத்தில் 11-1 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் சற்று போராடிய ஸ்ரீகாந்த் மேலும் 5 கேம்களை கைப்பற்றியபோதும், முதல் செட்டை 6-21 என இழந்தார். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடி 21-11 என கைப்பற்றினார்.

    இதனால் மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இதிலும் கடுமையாகப் போராடினார் ஸ்ரீகாந்த். ஆனால், அனுபவ வீரரான லின் டான் அந்த செட்டை 21-18 என வசமாக்கினார். இதனால் 6-21, 21-11, 18-21 என்ற செட்கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து வெளியேறினார். இதனால். ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிந்தது.

    வெற்றி பெற்ற லின் டான், அரையிறுதியில் மலேசிய வீரர் லீ சாங் வெய்யை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×