என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் எதிராளியை கலங்கடித்த வினேஷ் போகத்: மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார்
    X

    ஒலிம்பிக்கில் எதிராளியை கலங்கடித்த வினேஷ் போகத்: மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார்

    ஒலிம்பிக் போட்டியில் எதிராளியை கலங்கடித்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சாதனைப் புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ருமேனியாவின் எமிலியா அலினாவை எதிர்கொண்டார்.

    துவக்கம் முதலே அபாரமாக விளையாடிய வினேஷ் போகத், எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் புள்ளிகளை குவித்தார். இதனால் முதல் பாதியில் 6-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது பாதியிலும் அதே பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியில் 11-0 என வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார்.
    Next Story
    ×