என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் முன்னேற்றம்
    X

    ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் முன்னேற்றம்

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், 58 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தனது முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை ஜோகன்னாவை எதிர்கொண்டார்.

    துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகன்னா விரைவில் இரண்டு புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் சாக்சி பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இருப்பினும் சாக்சி மாலிக் லாவகமாக மேலும் 2 புள்ளிகளைப் பெற, 0-4 என முன்னிலை பெற்றார்.

    அதன்பின்னர் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் மனம் தளராமல் விளையாடிய சாக்சி, ஜோகன்னாவுக்கு வாய்ப்பு அளிக்காமல் அடுத்தடுத்து 5 புள்ளிகளைப் பெற்று, 5-4 என வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியை உறுதி செய்யும் இந்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொள்கிறார் சாக்சி மாலிக்.
    Next Story
    ×