என் மலர்

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை 4-வது தங்கம் வென்றார்
    X

    ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை 4-வது தங்கம் வென்றார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார்.
    ரியோ டி ஜெனீரோ:

    ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷிமோன் பைல்ஸ் ஆதிக்கம் தொடர்கிறது.

    ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார். அவர் 15.966 புள்ளிகள் பெற்றார். ஷிமோகன் பைல்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கனவே ஆல்ரவுண்டு, வால்ட் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

    பேலன்ஸ் பீம் பிரிவில் ஷிமோன் பைல்ஸ் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். இதனால் இந்த ஒலிம்பிக்கில் அவருக்கு இதுவரை 5 பதக்கம் கிடைத்துள்ளது.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை அலை ரெய்சன் (15,500 புள்ளிகள்) வெள்ளி பதக்கமும், இங்கிலாந்து வீராங்கனை அமய் டிங்லெர் (14.933 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் புளோர் பிரிவில் பெற்றனர்.

    ஜிம்னாஸ்டிக் அர்டிஸ்டிக் பிரிவில் அமெரிக்கா இதுவரை 12 பதக்கம் பெற்றுள்ளது.

    Next Story
    ×