என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்
    X

    தடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்

    ரியோ ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை எத்தியோப்பியா வென்றது.
    ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பந்தயங்கள் நேற்று தொடங்கியது. தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை எத்தியோப்பியா வென்றது.

    பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீராங்கனை அல்மாஸ் அயனா 29 நிமிடம் 17.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். இதற்கு முன்பு 1993-ம் ஆண்டில் சீன வீராங்கனை வாங் ஜூன்சியா 29 நிமிடம் 31.78 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

    அந்த சாதனையை அல்மாஸ் அயனா நேற்று தகர்த்தார். இந்த பந்தயத்தில் கென்யா வீராங்கனை ஜெப்கி மோய் (29 நிமிடம் 32.53 வினாடி) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு எத்தியோப்பியா வீராங்கனை திருனேஷ் டிபாபா (29 நிமிடம் 42.56 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
    Next Story
    ×