என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த சதி? மேலும் 2 பேர் கைது
ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது தாக்குதல் நடத்த சதி நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததின்பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ரியோ டி ஜெனீரோ:
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது தாக்குதல் நடத்த சதி நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததின்பேரில் அந்த நாட்டின் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 12 பேரை கைது செய்தனர். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்துடன் சேர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக தெரிய வந்தது.
நேற்றுமுன்தினம் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களது பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
இதுபற்றி பிரேசில் அதிகாரிகள் கூறும்போது, “பிரேசிலில் பயங்கரவாத கும்பல்களுடன் எந்த மோதலும் இதுவரை நடந்தது இல்லை. என்றாலும், ஒலிம்பிக் போட்டியையொட்டி இந்த நாடு இப்போது பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி இருக்கிறது. இதற்கு, ஐ.எஸ். இயக்கத்துடன் சண்டையிட்டு வரும் நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருப்பதுதான் காரணம்” என்றனர்.
இதற்கிடையே ரியோ டி ஜெனீரோ நகர் சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள குடிசைப்பகுதியில் ராணுவ போலீசார் மீது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 3 ராணுவ போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story