என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்: 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் ககன் நரங், செயின் சிங் தோல்வி
    X

    ரியோ ஒலிம்பிக்: 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் ககன் நரங், செயின் சிங் தோல்வி

    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் ககன் நரங் மற்றும் செயின் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ககன் நரங் மற்றும் செயிங் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ககன் நரங் 623.1 புள்ளிகள் பெற்று 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். செயின் சிங் 619.6 புள்ளிகள் பெற்று 36-வது இடத்திற்கு பின்தங்கினார்.

    ரஷிய வீரர் செர்கெய் காமென்ஷ்கிய் 629 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு ஒலிம்பிக் சாதனையும் படைத்தார். மற்றொரு ரஷிய வீரர் கிரில் க்ரிகோர்யான் 628.9 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

    தென்கொரியா வீரர் 3-வது இடத்தையும், பல்கேரியா வீரர் 4-வது இடத்தையும், இத்தாலி வீரர்கள் 5-வது மற்றும் 6-வது இடத்தையும், தாய்லாந்து வீரர் 7-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் 8-வது இடத்தையும் பிடித்தனர். இந்த 8 பேரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×