என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலக்கை நோக்கி அம்பு எய்துகிறார், பாம்பய்லாதேவி.
    X
    இலக்கை நோக்கி அம்பு எய்துகிறார், பாம்பய்லாதேவி.

    பெண்கள் வில்வித்தை: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பாம்பய்லாதேவி

    வில்வித்தையில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவின் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பாம்பய்லாதேவி ஆஸ்திரிய வீராங்கனை லாரன்ஸ் பால்டாப்பை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
    ஒலிம்பிக் வில்வித்தையில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவின் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பாம்பய்லாதேவி நேற்று அடியெடுத்து வைத்தார். முதல் சுற்றில் ஆஸ்திரிய வீராங்கனை லாரன்ஸ் பால்டாப்பை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். சிறிது நேரத்தில் 2-வது சுற்றில் சீனத்தைபே வீராங்கனை சியா லின் ஷியுடன், பாம்பய்லாதேவி மோதினார்.

    இதிலும் 4 செட்டுகளிலும் பாம்பய்லாதேவி அம்புகளை எய்துவதில் எதிராளியை விட சிறப்பாக செயல்பட்டார். அவரது வில்லில் இருந்து பாய்ந்த அம்பு நான்கு முறை துல்லியமாக 10 புள்ளிகளை பெற்றுத்தந்தது. இதன் அடிப்படையில் பாம்பய்லாதேவி 6-2 என்ற கணக்கில் சியான் லின் ஷியை வெளியேற்றி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.
    Next Story
    ×