என் மலர்
செய்திகள்

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்தில் பிரேசில்-சீனா இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.
ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி
ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ரியோ டி ஜெனீரோ :
ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக இன்று தொடங்கினாலும், கால்பந்து போட்டிகள் இரண்டு நாளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பெண்கள் கால்பந்து பிரிவில் 12 அணிகள் பங்கேற்று அவை இ, எப், ஜி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
‘இ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போட்டியை நடத்தும் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும், சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. ‘எப்’ பிரிவில் ஜெர்மனி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிம்பாப்வேயையும், கனடா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டங்களில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் வென்றன.

Next Story