என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இங்கிலாந்தை வீழ்த்த இன்னும் சிறப்பான ஆட்டம் தேவை: மேத்யூஸ் அறிவுரை
By
மாலை மலர்19 Jun 2016 1:42 PM GMT (Updated: 19 Jun 2016 1:42 PM GMT)

ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என மேத்யூஸ் சக வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுநாள் (21-ந்தேதி) நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னர் அயர்லாந்துடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மோதியது. இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் குவித்தது. நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 377 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குசால் பெரேரா 135 ரன்னும், மற்றொரு வீரர் பிரசன்னா 46 பந்தில் 95 ரன்னும் குவித்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்து, அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை அணிக்கு புத்துயிர் அளித்துள்ளது. இருந்த போதிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்த இன்னும் சிறப்பான ஆட்டம் தேவை என மேத்யூஸ் சக வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் தொடர் குறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று முறைகளிலும் நாம் முன்னேற முடியும். அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் பெற்ற வெற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருந்தாலும் இங்கிலாந்தை வீழ்த்த இன்னும் நமது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Next Story
×